தமிழ்நாடு

"பாவ விமோசனமே அண்ணாமலையின் பாதயாத்திரை" - அமைச்சர் சேகர் பாபு.

Malaimurasu Seithigal TV

9 ஆண்டுகாலத்தில் பெற்ற பாவத்திற்கான விமோசனம்தான் அண்ணாமலையின் பாத யாத்திரை என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதி தி.மு.க. சார்பில், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, 130 கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஊட்டச்சத்துப் பொருட்கள், புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஓரிரு சதவீதம் மட்டுமே வாக்குவங்கி வைத்துள்ள பாஜகவுடன் எஃக் கோட்டையான திமுகவை ஒப்பிட வேண்டாம் என்று கூறினார். 

மேலும், 9 ஆண்டுகாலத்தில் பெற்ற பாவத்திற்கான விமோசனம்தான் அண்ணாமலையின் பாத யாத்திரை என்றும் விமர்சித்துள்ளார்.