District Collector of Kanyakumari  
தமிழ்நாடு

"நீங்களும் ஸ்டுடென்ட்-டா இருந்துதானே.. லீவ் விடுங்க சார்" - வைரலாகும் கியுட் சேட்டைகள்! கலெக்டருக்கு இன்ஸ்டாவில் குவிந்த மெசேஜ்கள்

"நீங்களும் இதுக்கு முன்னாடி ஸ்டுடென்ட்டா தான இருந்துருப்பீங்க, அப்புடித்தான இந்த பதவிக்கு வந்துருப்பீங்க. உங்களுக்கு இந்த கஷ்டம் புரியும் சார்.. அதுனால லீவு விடுங்க"

Vinvizhi Leninton

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகிக்கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. அதனால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை அணுகி சில மாணவர்கள் விடுமுறை விடும்படி கெஞ்சுவதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால், பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (அக் 26) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாபிடம் மாணவர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்து விடுமுறை அளிக்கும்படி கேட்டுள்ளனர். மேலும், 'மாணவர்கள் விடுமுறையை எப்படியெல்லாம் கேட்டுள்ளார்கள்' என்பதை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

District Collector of Kanyakumari

அதில் பள்ளி மாணவர்கள், "மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை கொடுங்கள் சார்" என்றும், கல்லூரி மாணவர், "ஸ்கூல் பசங்களுக்கு ஸ்கூல் பஸ் வீட்டு வாசல்ல வந்து நிக்கும். ஆனா, காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் ரோடுல ரொம்ப தூரம் நடந்துதான் போகணும். மழை இல்லனாலும் ரோடுல தண்ணி நிக்கும். அதுனால லீவு கொடுங்க சார்" என்றும், "நாளைக்கு பரீட்சை இருக்கு.. லீவு இருக்கா இல்லையா?" என்றும், "இடி, மின்னலுடன் மழை வருது, ஜன்னல் வழியா பாருங்க. அதுனால லீவு குடுங்க" என்றும், "நீங்களும் இதுக்கு முன்னாடி ஸ்டுடென்ட்டா தான இருந்துருப்பீங்க, அப்புடித்தான இந்த பதவிக்கு வந்துருப்பீங்க. உங்களுக்கு இந்த கஷ்டம் புரியும் சார்.. அதுனால லீவு விடுங்க" என்றும், "யூனிஃபார்ம்லாம் ஈரமா இருக்கு சார்" என்றும் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு இன்ஸ்டாகிராமில் உரிமையாக மெசேஜ் செய்துள்ளனர்.

இந்த மெசேஜ்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் ரீல்-லாக பகிர்ந்துள்ளது, காண்போரை வியக்க வைத்ததுடன் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்