தமிழ்நாடு

இறந்தும் நிம்மதியில்லை.. அஸ்தியை கரைக்க ஆளில்லை

Malaimurasu Seithigal TV

கொரோனா அச்சத்தால் உறவினர்கள் கூட வாங்க மறுத்த அஸ்திகள் மயானத்தில் தேங்கி வருகின்றன.

கொரோனா அச்சம் அதிகரித்துவரும் நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கொரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றன.

இங்கு ஒருநாள் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றன. இறந்தவர்களின் உடல்களை ஒரு சிலர் மட்டும்  ஆம்புலன்ஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்கின்றன. கொரோனா அச்சத்தால் சிலர் மருத்துவமனை அருகே உள்ள எரிவாயு தகன மேடையில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுகின்றனர்.

இங்கு  எரியூட்டப்படும் ஆஸ்திகளை உறவினர்கள் வாங்கி செல்வது வழக்கம் ஆனால் கொரோனா தொற்றின் அதிகாரிப்பால் உறவு என்று கூட பாராமல்  எரியூட்டும் ஊழியர்களிடமே தந்து விட்டு சென்று விடுகின்றனர். இப்படி குவியும் அஸ்திகள் மயானத்தில் தேங்கி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேங்கி இருக்கும் 20 அஸ்திகள் ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றன.