"நானும், விஜய் சேதுபதியும் தான் வெளியில் இருந்து வந்தோம்.. ஆனா மத்தவங்களுக்கு அப்படியில்ல" - போட்டுடைத்த SK 
தமிழ்நாடு

"நானும், விஜய் சேதுபதியும் தான் வெளியில் இருந்து வந்தோம்.. ஆனா மத்தவங்களுக்கு அப்படியில்ல" - போட்டுடைத்த SK

"நான் செல்ஃப் மேட் கிடையாது. 'ஐம் நாட் செல்ஃப் மேட்; ஐம் பீப்பிள் மேட்' மக்களால உருவாக்கப்பட்டவன் நான்." என்றார் சிவகார்த்திகேயன்

மாலை முரசு செய்தி குழு

சிவகார்த்திகேயன் கடந்த அக்டோபர் 4ம் தேதி போரூர் அருகே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பை நடத்தினார். இந்த நிகழ்வில் சுமார் 2000 நிர்வாகிகள் வெள்ளை உடையில் காலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வுக்காக அரசியல் மாநாடு போல பெரிய பேனர்களுடன் திடல் அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் சிவகார்த்திக்கேயன்.

"நீங்க இருப்பீங்களா இண்டஸ்ட்ரில?" - தயாரிப்பாளர் கேட்ட கேள்வி!

தனது ரசிகர்கள் குறித்து தயாரிப்பாளருடனான உரையாடல் குறித்து பேசிய அவர், "ஒரு சில படங்கள் பண்ணி இருந்த டைம் அப்போ வந்து ஷூட்டிங்கு நம்முடைய ஃபேன்ஸ் ஒரு 10 - 15 பேர் வந்திருந்தாங்க.

அப்ப அவங்கள எல்லாம் பார்த்துட்டு நான் வரும்போது அங்க ஒரு ப்ரொடியூசர் வந்திருந்தாரு. 'என்ன சிவா யாரு' அப்படின்னு கேட்டாரு நான் சொன்னேன் 'என்னுடைய ஃபேன்ஸ் சார்' அப்படின்னேன். 'ஓ ஃபேன்ஸ் எல்லாம் இருக்காங்களா உங்களுக்கு' அப்படின்னு கேட்டாரு."

"அப்ப நான் சொன்னேன் 'ஆமா சார் இப்ப நிறைய ஃபேன்ஸ்ன்னு சொல்லி ஆசையா வந்து பார்கறாங்க சார்'ன்னு சொன்னேன். அப்ப அவர் சொன்னாரு 'சிவா இதெல்லாம் அந்த பிகினிங்ல இருக்க கிரேஸ்ல கொஞ்ச நாளைக்கு வருவாங்க' அப்படின்னு சொன்னாரு. நான் சொன்னேன் 'இல்ல சார் தொடர்ந்து வருவாங்க' அப்படின்னு. அப்ப அவர் சொன்னாரு 'சிவா உங்களுக்கு புரியல உங்களுக்கு அனுபவம் இல்லல்ல புரியல அதெல்லாம் கொஞ்ச காலம் தான் வருவாங்க நீங்க இதெல்லாம் எதுக்கு பா்கறீங்க நீங்க பாட்டுக்கு வேலைய பாருங்க' அப்படின்னார்.

Fans Meet

நான் திரும்பவும் உறுதியா சொன்னேன் 'இல்ல சார் இவங்க அப்படி தெரியல நிச்சயமா கூட வருவாங்க சார்'ன்னு சொன்னேன். நான் ரெண்டு முறை அவரை மறுத்து பேசினது அவருக்கு ஏதோ தோனிடுச்சுன்னு நினைக்கிறேன். அவர் டக்குன்னு என்ன சொன்னாருன்னா 'அவங்க வருவாங்க சரி, அவங்க இருப்பாங்க சரி, நீங்க இருப்பீங்களா இண்டஸ்ட்ரில' அதை பார்த்துக்கங்க அப்படின்னு சொன்னாரு."

"2026 சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தோட நிர்வாகிகள் சந்திப்பு 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளோட இந்த சந்திப்பு இன்னைக்கு இங்க நடக்குது.

இன்னைக்கு இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரால மாநில தலைமை, அதே மாதிரி மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி இந்த நிர்வாகிகள் அத்தனை பேருக்கும், என்னுடைய தம்பிகளான ஆனவங்க எல்லாருக்கும் என்னுடைய வணக்கம். நன்றி. லவ் யூ. " எனப் பேசினார்.

"9 ஆண்டுகள் நடத்திட்டு வறோம்"

மேலும், "இந்த நிர்வாகிகள் சந்திப்பு இப்ப இன்னைக்கு பா்க்கிற சிலருக்கு இப்பதான் பண்றோம்னு தோணலாம். நம்ம இத ரொம்ப வருஷமா பண்ணிட்டு இருக்கோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நம்ம நிர்வாகிகள் சந்திப்பு நடத்திட்டு இருக்கோம். இது எதுக்காக அப்படிங்கிறத பின்னாடி சொல்லிடுறேன்... அதிகாரப்பூர்வமா ஒன்பது ஆண்டுகளா நடத்திட்டு வரோம்" எனப் பேசினார்.

SK

"நான் செல்ஃப் மேட் இல்லை மக்களால் உருவாக்கப்பட்டவன்"

தொடர்ந்து தனது பயணம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், "நற்பணி இயக்கம் ஆரம்பிச்சாச்சு இத எப்படி செய்யணும்னு நிறைய ஆசைகள் நிறைய கனவுகள் இருந்தது. ஆனா முதல்ல இது ஏன் இருக்கணும், எதுக்காக இது என்ன செய்ய போறோம்? இப்படி பல கேள்விகள் இருந்திருக்கும்.

யோசிச்சு பார்த்தா நான் யார்? ரொம்ப சாதாரணமான ஒரு ஆள். இங்க தமிழ்நாட்டில கனவோட ஆசையோட லட்சியத்தோட இருக்கிற கோடிக்கணக்கான இளைஞர்கள் மாதிரிதான் நானும் ஒருத்தன். ஆனா நீங்க, மக்கள் எல்லாரும் சேர்ந்து இப்படி ஒரு இடத்தையும் இந்த பெயர், புகழ், வசதி எல்லாத்தையுமே கொடுத்திருக்கீங்க.

எனக்கு இந்த சினிமா இண்டஸ்ட்ரில பின்புலம் யாரும் கிடையாது. தனியாவேதான் இங்க வந்தோம். இன்னும் சொல்லப்போனா 17 வயசுக்கு மேல கைய பிடிச்சு கூட்டிட்டு போக அப்பா கூட இல்லாத ஒரு பையன்தான் நான்.

VJS, SK

ஏதோ ஒரு வாய்ப்பு கிடைச்சா பண்ணிரலாம்னு, டிவில ஒரு எபிசோடுன்னு நினைச்சுதான் பண்ணிட்டு இருந்தேன். ஆனா மக்கள் அதை எபிசோடா பார்க்கல, நம்ம பையன்பா ஜாலியா பண்றான் இவனை என்கரேஜ் பண்ணுவோம்னு சொல்லி நீங்க எல்லாரும் கை தட்டுனீங்க. நான் சினிமால போயிட்டு சின்ன சின்ன ரோல் நடிச்சிடலாம்னு நினைச்சேன். 'நீ ஏன் சின்ன ரோல் நடிக்கிற ஹீரோவாவே நடி'ன்னு நீங்க எல்லாரும் சொன்னீங்க. நான் ஹீரோனா சின்ன குட்டி குட்டி படங்கள் ஜாலியான படங்கள் பண்ணிடலாம்னு நினைச்சேன். நீங்க வந்து 'அதெல்லாம் கிடையாது, நீங்க எல்லாமே பண்ணுங்க, நீங்க மாஸா பண்ணுங்க'ன்னு நீங்க சொன்னீங்க. நீங்க எல்லாரும் சேர்ந்து கை தட்டி தூக்கிட்டு வந்து கொடுத்த இடம்தான் இது. நீங்க எல்லாரும் என்ன 'செல்ஃப் மேட்'னு சொன்னீங்க. நிச்சயமா நான் செல்ஃப் மேட் கிடையாது. 'ஐம் நாட் செல்ஃப் மேட்; ஐம் பீப்பிள் மேட்' மக்களால உருவாக்கப்பட்டவன் நான்." என்றார்.

"நானும் விஜய் சேதுபதியும்..."

தொடர்ந்து பேசிய அவர், "2012ல இந்த சினிமாக்குள்ள வரும்பொழுது அந்த டைம் நானும் விஜய் சேதுபதி மட்டும்தான் அவுட்சைடர்ஸ். சினிமா ஃபேமிலி இல்லாம உள்ள வந்தது. அந்த டைம் 80% பேர் எங்களுக்கு முன்னாடி இருந்த ஜெனரேஷன் சினிமா குடும்ப பின்னணியில இருந்துதான் வந்திருந்தாங்க.

'டிவில இருந்து எப்படி ஒருத்தர் ஹீரோவா வரலாம், ஆங்கர் எப்படி ஹீரோ ஆகலாம், மிமிக்ரி எப்படி ஹீரோ ஆகலாம்'ன்றது இருந்தது. ஆனா மக்கள் அந்த கேள்வியை கேட்டதே இல்லை. 'நம்மல இருந்து ஒருத்தன் ஏன் ஹீரோ ஆக கூடாது'ன்னு சொல்லி என்ன கை தட்டி தூக்கிட்டு வந்துங்க நிக்க வச்சிருக்கீங்க.

மக்கள் இந்த இடத்தில் நம்மை வச்சிருக்க மக்களுக்கு திருப்பி ஏதாவது செய்யணும்ன்றதுக்காக நான் முதல்ல ஆரம்பிச்சதுதான் ஜி தாஸ் ட்ரஸ்ட். அப்பாவுடைய பெயர்ல நான் பண்ற உதவிகள் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். சில விஷயங்கள் தெரியாம அது சாட்டிஸ்பேக்ஷன்க்காக பண்ணிட்டு இருக்கோம். ஆனா நான் ஒருத்தன் மட்டுமே எல்லா இடங்களலயும் செஞ்சிட முடியாது. அப்ப அதுக்கு பலம் வேணும். அந்த பலம்தான் நீங்க!" என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்