தமிழ்நாடு

சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டும் பணி! அமைச்சர்கள் நேரில் ஆய்வு!!

Tamil Selvi Selvakumar

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்று வரும் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணியை அமைச்சா்கள் நோில் ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகாசி - சாத்தூர் செல்லும் புறவழி சாலையில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை அமைச்சா்கள் கேஎன் நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர்கள் திமுக மாமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.