தமிழ்நாடு

கொசுவை கொல்ல போடப்பட்ட புகையால் மூச்சுத்திணறி பலியான பெண்!  

சென்னை பல்லாவரத்தில் கொசுவை கொல்லுவதற்காக போடப்பட்ட புகையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை பல்லாவரத்தில் கொசுவை கொல்லுவதற்காக போடப்பட்ட புகையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரம் பம்மல் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு புஷ்ப லஷ்மி என்ற மனைவியும், மல்லிகா என்ற மகள் மற்றும் பேரக்குழந்தை ஒருவரும் உள்ளனர். இந்த நிலையில், கொசுவை விரட்டுவதற்காக, ஆயில் டின் ஒன்றில் வேப்பம் இலை, நொச்சி இலை ஆகியவற்றை போட்டு புகை மூட்டியதாக தெரிகிறது. மேலும் புகையை அணைக்காமல், ஏசியையும் போட்டுவிட்டு, அனைவரும் தூங்கியுள்ளனர். இதனால் வீடு முழுவதும் புகை பரவியதால், மூச்சித் திணறில் ஏற்பட்டு புஷ்ப லட்சுமி உயிரிழந்தார்.

மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.