தமிழ்நாடு

மம்தா பேனர்ஜியை கரம் பிடித்த சோசிலிசம்

சமூகவலைதளங்களில் வைரலான திருமண அழைப்பிதழுக்கு சொந்தக்காரர்களான சோசலிசத்துக்கும் மம்தா பேனர்ஜிக்கும் திருமணம் நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

சமூகவலைதளங்களில் வைரலான திருமண அழைப்பிதழுக்கு சொந்தக்காரர்களான சோசலிசத்துக்கும் மம்தா பேனர்ஜிக்கும் திருமணம் நடைபெற்றது.

சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த காட்டூர் பகுதியில் பாரம்பரிய கம்யூனிஸ்ட் குடும்பத்தை சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளருமான மோகன் என்பவர் தனது பிள்ளைகளுக்கு கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிஸம், சோசிலிசம் என்று வித்தியாசமாக கொள்கை ரீதியான பெயர்களை வைத்துள்ளார். இவர்களில் சோசிலிசம் என்பவருக்குத்தான் மம்தா பானர்ஜி என்பவருடன் திருமணம் நிச்சியக்கப்பட்டு இருந்தது. சோசிலிசத்தின் முறைப்பெண்ணான மம்தாபானர்ஜியை கடந்த மூன்று ஆண்டுகளாக நேசித்த அவர் பெற்றோர் சம்மதத்துடன் தற்போது கரம்பிடித்துள்ளார். சேலத்தில் இருவீட்டாரின் முன்னிலையில் இவர்களது திருமணம் இனிதே நடைபெற்றது.



தமிழகத்தில் தற்போது பேமசாகியுள்ள சோசிலிசம்-மம்தா பேனர்ஜி தம்பதியினர், தங்களது பெயர் அரசியலில் முரண்பட்ட கொள்கை கொண்ட பெயர்கள் என்றாலும், இல்லற வாழ்வில் ஓர் எடுத்துக்காட்டாய் திகழ்வோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.