தமிழ்நாடு

ஏடிஎம் இயந்திரத்தில் தானாக வெளி வந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர்!!

Tamil Selvi Selvakumar

சேலம் மாவட்டம் ஓமலூரில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் தானாக வந்த 9 ஆயிரத்து 500 ரூபாயை ஒருவர் நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

தனியார் நிறுவன ஓட்டுநரான சச்சின் என்பவர் ஏடிஎம் சென்ற போது, அந்த இயந்திரத்தில் ஏற்கனவே பணம் வெளியில் வந்திருந்தது.  எண்ணிப் பார்த்தபோது அதில் 9 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.

இதையடுத்து அந்த பணத்தை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறையினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய சச்சின் பணத்தை ஒப்படைக்க முதலில் வங்கிக்குச் சென்றதாகவும், அவர்கள் அலைக்கழித்ததால் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.

ஓமலூர் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் அடிக்கடி இது போன்ற சம்பவம் நடைபெறுவதாகவும், வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.