இந்திய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உலக சாதனையை சந்திரயான் 3 படைத்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சோம்நாத்துக்கு எழுதிய கடிதத்தில், ” பல்லாண்டுகள் உழைத்து உலகத் தரத்தை இஸ்ரோ அடைந்துள்ளதாகவும், 1960 -களில் இருந்தே தன்னிச்சையாக தனது தேவைகளை உணர்ந்து சாதிக்கும் வகையில் இஸ்ரோ செயல்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக சாதனைக்கு வழிகோலிய சந்திரயான் 3 திட்டத்திற்குக் காரணமான அனைவரையும் மனமாற வாழ்த்துவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிக்க | திமுகவினர் சொத்து குவிப்பு; "வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" அண்ணாமலை கோரிக்கை!