தமிழ்நாடு

தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரத்துறையினருக்கு விரைவில் பணி நிரந்தரம்  

Malaimurasu Seithigal TV

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரத்துறையினரை விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 10 ஆண்டு கைவிடப்பட்ட இத்திட்டத்தை, ஆண்டுக்கு ஆயிரம் இடங்களில் நடத்தவுள்ளதாக கூறினார்.  தமிழகத்தில் டெங்குவுக்கு 331 பேர்  சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறினார்.  கொரோனாவால் உயிரிழந்த சுகாதாரத்துறையினருக்கு நிவாரண தொகை வழங்கவும் பட்டியல் தயார் செய்யப்படுவதாக தெரிவித்தார். தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதாரத்துறையினரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.