குன்னுாரில் தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா குன்னூர் ரயில் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதி சாலைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
தென்னக ரெயில்வே
குன்னுார் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தென்னக இரயில்வே பொது மேலாளர் மல்லையா, குன்னூர் ரயில் நிலையம் மற்றும் இரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் அபாயகரமான சாலைகளை செப்பனிட ஆய்வு மேற்கொண்டார் அங்கு இரயில்வே ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை
குன்னூர் ரயில்வே ஊழியர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்து கூறினார். விரைவில் சரி செய்து தரப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வில் தென்னக இரயில்வே சேலம் கோட்ட மேலாளர் கெளதம், குன்னூர் ரயில் நிலைய மேலாளர் உட்பட இரயில்வே ஊழியர்கள் உடனிருந்தனர்.