தமிழ்நாடு

மிஸ் பண்ணிடாதீங்க.. தமிழகத்தில் 600 இடங்களில் சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் 6வது சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 9 மாதங்கள் நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியான முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

வாரந்தோறும் வியாழக்கிழமையன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 6 வது சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறுகிறது சென்னையில் மட்டும் 160 இடங்களிலும் சிறப்பு புஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.