மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரிய வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத்தில், 3 ஆயிரத்து 578 வழக்குகளில், 145 கோடியே 33 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரிய வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத் இன்று நடந்தது.சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று அமர்வுகள், மதுரைக் கிளையில் மூன்று அமர்வுகள், மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் 133 அமர்வுகளில் இந்த வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த லோக் அதாலத்தில் மூன்றாயிரத்து 578 வழக்குகளில் 145 கோடியே 33 லட்சத்து 21 ஆயிரத்து 292 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.