தமிழ்நாடு

பள்ளத்தில் தேங்கி நின்ற மழை நீர்.. தாம்பரம் கமிஷனர் அதிரடி உத்தரவு..!

Tamil Selvi Selvakumar

தாம்பரம் கமிஷனர் அதிரடி உத்தரவு

தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை புருஷோத்தம் நகரில் தேங்கிய மழை நீரை முழுவதும் வெளியேற்றாமல் கான்கிரீட் கலவைகளை கொட்டி நடைபெற்று வரும் பணிகளால் இளநிலை பொறியாளர் வெங்கடேசன் தற்காலிகமாக பணியிடை நீக்கும் செய்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் உத்தரவுவிட்டுளார்.

பள்ளத்தில் தேங்கி நின்ற மழை நீர்

தாம்பரம் மாநகராட்சி 36-வது வார்டு பகுதி புருஷோத்த நகர் பகுதியில் 5 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாக மழைநீர் விரைந்து செல்வதற்காக கல்வெட் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்று உள்ளது.

சிமெண்ட் கலவைகளை கொண்டு மறைக்க முயற்சி

இந்த நிலையில் இன்று பள்ளத்தில் தேங்கிய மழைநீரை முறையாக அகற்றமால், திடீரென மழைநீர் வடிகால் அமைப்பதற்காக  சிமெண்ட் கலந்த கலவைகளை தேங்கி மழைநீரில் கொட்டி பணிகள் நடந்துள்ளது. இந்தப் பணிகளை பார்த்த பொது மக்கள் கேள்வி எழுப்பியதால் உடனடியாக மோட்டர் மூலம் ஒரு புறம்  தண்ணீரை வெளியேற்றி கொண்டே பணிகள் நடந்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்காலிக பணியிடை நீக்கம்

மேலும் இது சம்பந்தமாக தகவல் அறிந்த தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பணியை முறையாக நேரில் பார்வையிடாத இளம் பொறியாளர் வெங்கடேஷ் அதிகாரியை தற்காலிகமாக பணியிடை நீக்கும்  செய்து உத்தரவிட்டார்.