``அம்பேத்கர் திட்டத்தின் மீது தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு? 'RTI மூலம் அம்பலம்'.. வதைக்கப்படும் மாணவர்கள்" - ஸ்டாலின் கறார் கேள்வி! 
தமிழ்நாடு

``அம்பேத்கர் திட்டத்தின் மீது தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு? 'RTI மூலம் அம்பலம்'.. வதைக்கப்படும் மாணவர்கள்" -ஸ்டாலின் கறார் கேள்வி!

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் பல்கலைக்கழக்கத்துக்கான கட்டணமும் கொடுக்க முடியாமல் தங்கும் இடத்துக்கான தொகையும் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Antony Ajay R

"அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தாளில் இன்று காலை வெளியான செய்தியறிக்கையின்படி, உரிய ஆவணங்களை சமர்பித்த பிறகும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பலக்லைக்கழக்கங்கக்களில் பயிலும் மாணவர்களுக்கு நிதி வழங்க அரசு தாமதப்படுத்தி வருகிறது.

இதனால் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் பல்கலைக்கழக்கத்துக்கான கட்டணமும் கொடுக்க முடியாமல் தங்கும் இடத்துக்கான தொகையும் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், "உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.

மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?

இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?

திராவிட மாடல் அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!" என விமர்சித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.