DMK joining event DMK joining event
தமிழ்நாடு

"சுயலாபத்திற்காகத்தான் ஆளும் கட்சிக்கு செல்வார்கள்" திமுக தயவில் நடக்கும் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி - மறைமுகமாக சாடும் ஸ்டாலின்

தோல்வியை கண்டு துவண்டு விடாமல் உழைப்பவன்தான் திமுககாரன் என்று நாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம் என்று அவர் பேசினார்.

Vinvizhi Leninton

பதவிக்காகவோ அல்லது சொகுசாக வாழவேண்டும் என்றோ வரவில்லை பணியாற்றவேண்டும், இந்த தமிழ் சமுதாயத்திற்கு பாடுபடவேண்டும், இழந்திருக்க கூடிய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்த மாற்று கட்சியினர் திமுக-வில் சேரும் விழாவிற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். மேலும், சுயலாபத்திற்காகத்தான் ஆளும் கட்சிக்கு செல்வார்கள் என்றும் பேசினார்.

தான் ஒரு தளபதியாகவோ அல்லது தலைவனாகவோ இருக்கும் போது கட்சிக்கு உண்மையாக இருக்கவேண்டும். திமுக-வின் வரலாறு என்பது 1949 தொடங்கி அதன் பிறகு 1952ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினாலும், 1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றிபெற்றோம். அதன் பிறகு 1962ல் தேர்தல் காலத்தில் ஈடுபட்டு எதிர்க்கட்சி வரிசையிலே அமரக்கூடிய அளவிற்கு 50 இடங்களில் வெற்றி பெற்றோம். அதன் பின்பு 1967ல் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றோம். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் ஆட்சி பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார். அதன் பிறகு 1971ல் நடைபெற்ற தேர்தலில் கலந்துகொண்டு வெற்றி பெற்றோம். 1975ம் ஆண்டு இந்தியாவிலே நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடிக்கு நிலையை நாம் எதிர்த்தோம். ஆட்சி கவிழும் என்று தெரிந்திருந்தே அதை நாம் எதிர்த்தோம். அது பற்றி நாம் கவலைப்படவில்லை. கலைஞர், ஆட்சி நமக்கு முக்கியமில்லை, ஜனநாயகம்தான் முக்கியம் என்று கருதி சென்னை கடற்கரையிலே லட்சக்கணக்கான மக்களை திரட்டி தீர்மானம் நிறைவேற்றினார். நெருக்கடி நிலையை ரத்து செய்து, கைது செய்திருக்கக்கூடிய தலைவர்களை விடுதலை செய்யகோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் 1976ல் ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன் பிறகு 13 ஆண்டுகள் நம்மால் ஆட்சி பொறுப்பிற்கு வரமுடியவில்லை. பின்பு 1996ல் ஆட்சிக்கு வந்தோம். 2001 இடைத்தேர்தலில் தோற்றாலும், 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தோம். 2011ல் தோற்றோம் பின்பு 2021ல் ஆட்சிக்கு வந்தோம். இதை கூறுவதன் நோக்கம், வெற்றி தோல்வி என்பது நமக்கு மாறி மாறி கிடைத்த ஒன்று. அதற்காக வெற்றி கண்டு வெறிகொண்டு அலைபவர்கள் இல்லை. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் உழைப்பவன்தான் திமுககாரன் என்று நாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம் என்று அவர் பேசினார்.

ஆட்சி பொறுப்பில் இருந்து விலகியிருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து பணிசெய்வோம் என்று அவர் பேசினார். இப்பொது நடக்கும் ஆட்சியே நமது தயவில்தான் நடந்துகொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ஏனென்றால் நாம் வெற்றி பெற வேண்டும், திமுக தரப்பில் ஆட்சியமைய வேண்டும், எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்கவேண்டும் என்ற நிலையில்தான் நாம் தேர்தல் காலத்தை சந்தித்தோம். தவெக-வோடு கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் பல இடங்களில் கூறியிருக்கிறார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டுதான் வந்தோம். அவர்களிடம் நான் கூறியது, உங்கள் விருப்பம் நான் தடுக்கமாட்டேன், உங்கள் ஜனநாயகம். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது. அதன்காரணமாக பிஜேபி ஆட்சி தமிழ் நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்ற அடைப்படையில்தான் அவர்களை வழியனுப்பிவைத்தேன் என்று மேடையில் பேசினார் மு.க.ஸ்டாலின்.

இப்படி நம் தயவில் நடக்கக்கூடிய ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உறுதி எடுத்துக்கொண்டு பணியாற்ற இந்த நிகழ்ச்சியில் உறுதியேற்போம் என்று மாற்று கட்சியினர் திமுக-வில் சேரும் விழாவில் தனது உரையை முடித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.