தமிழ்நாடு

யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Malaimurasu Seithigal TV

நீலகிரி மாவட்ட கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள், கரடிகள் என வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.  இந்நிலையில் தட்டப்பள்ளம் பகுதியில் யானை குட்டிகளுடன், இரண்டு யானைகள் அதே பகுதியில் உலாவுகின்றன. மேலும், தற்போது யானைகள் சாலைகளிலும் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

யானைகல் உலா வருவதால், தேயிலை தோட்ட விவசாயிகள் தேயிலை பறிக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர். மேலும் அருகில் உள்ள பலாப்பழங்களையும் யானைகள் சாப்பிடுவதால், நீண்ட நேரமாக அதே பகுதியில் உலவுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து   சம்பந்தப்பட்ட வனத்துறையினர், யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.