ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அன்னிய சக்தியின் தூண்டுதலில் அந்நிய நாட்டுக்காக போராட்டம் நடத்துகின்றனர் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நான்சி கூறியுள்ளார். இந்நிலையில் அவர் கூரியதாவது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறினார்.
மேலும், 2018 -ல் 144 தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கறிஞர் அரிராகவன் மக்களை அழைத்து வந்தது தவறு என்றும், அந்த போராட்டத்தில் உயிரிழந்த 15 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் இந்த வழக்கறிஞர் அரிராகவன் தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தால் 2018 சம்பவம் போல் மீண்டும் தூத்துக்குடியில் நடக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதோடு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை தாங்கள் கொடுத்துள்ளதாகவும், மேலும் முதல்வருக்கு ஆன்லைன் மூலமாக ஒரு லட்சம் மனு அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க } தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கும் நோக்கில் நிர்வாகம் ..! உச்சநீதிமன்றம் அனுமதி...!
தொடர்ந்து, தாங்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அன்னிய சக்தியின் தூண்டுதலின் பேரில் அந்நிய நாட்டுக்காக போராடுகின்றனர் எனவும் கூறினார். அதோடு, 15 உயிர் இழப்பிற்கு காரணம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் தான் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.