தமிழ்நாடு

சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை..! - மின்வாரியம் உத்தரவு.

Malaimurasu Seithigal TV

சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சேவை இணைப்புகளை வழங்க அதிகாரிகளும் ஊழியர்களும் லஞ்சம் கோருவதும் வாங்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது போன்ற வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.