தமிழ்நாடு

வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

போலீசார்  தாக்கி  வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏத்தாப்பூர் அருகே  மு போலீசார்  தாக்கியதில்  ருகேசன் என்பவர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த செய்தி தன் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும்  இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.

இதனிடையே முதலமைச்சரின் உத்தரவை ஏற்று சேலம் ஏத்தாப்பூரில் நடைபெற்று வந்த தொடர்  போராட்டம் கைவிடப்பட்டது. அத்துடன் வியாபாரி  முருகேசனின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.