தமிழ்நாடு

தடையை மீறி பொது இடங்களில் சிலை வைத்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக  அரசு எச்சரிக்கை

தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்புடும் என தமிழக  அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Malaimurasu Seithigal TV

நாடு  முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா  கொண்டாடப்படவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்து கொண்டாட  மத்திய  அரசு  வலியுறுத்தியுள்ளது.

 மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது. மேலும்  விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வழிபடுமாறு அறிவுறுத்தியது.

 
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்ததுடன், தடையை மீறி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்போம் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்தால் சட்டப்படை நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு  எச்சரிக்கை  விடுத்துள்ளது. மேலும் தடையை மீறுபவர்களை  கைது செய்ய  பாதுகாப்பு நடவடிக்கைகள் பலபடுத்தப்பட்டுள்ளது.