தமிழ்நாடு

பள்ளிகளில் தேர்வெழுத காத்திருந்த மாணவர்கள்... வினாத்தாள் வராததால் ஏமாற்றம்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தேர்வெழுத காத்திருந்தும் வினாத்தாள் வராததால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Tamil Selvi Selvakumar

செஞ்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரை அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட 75 பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வின் வினாத்தாள் பண்ருட்டி பகுதியில் இருந்து பிரிண்ட் செய்யப்பட்டு, மாவட்டம் முழுக்க வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் தேர்வுக்காக காத்திருந்தும் 2 மணி நேரமாக வினாத்தாள் வராததால், ஏமாற்றம் அடைந்தனர். இதனால், அந்தந்த பள்ளிகளுக்கு மெயில் மூலம் வினாத்தாள்களை அனுப்பி உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.