தமிழ்நாடு

35 ஆண்டுகளுக்கு பின்பு மாணவ மாணவியர்கள் சந்திப்பு

Malaimurasu Seithigal TV

பந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பழைய மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-90-ம் ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள்  முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்ததை நினைவு கூறும் வகையில் பந்தநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்கள் குடும்பத்தினருடன் ஒருவரையொருவர் சந்தித்தும், தங்களது ஆசிரியர்களை கவுரவித்தும் மகிழ்ந்தனர்.  

 இவர்கள் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட பணிகள் செய்து வருகின்றனர். கடந்த ஆறு மாதகாலமாக இவர்களில் சில மாணவர்கள் பெரும் முயற்சி செய்து இந்த சந்திப்பு நிகழ்வு நடைபெற முயற்சி செய்தனர். சிலர் விவசாயம், சுயதொழில் முனைவோராகவும், சிலர் தனியார் நிறுவனங்களிலும் பணி செய்து வருகின்றனர். இந்த  மாணவ மாணவியர்கள் ஒன்று சேர்ந்து பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். மேலும் தங்களது ஆசிரியர்களையும் கவுரவித்து மகிழ்ந்தனர். 35 ஆண்டுகளுக்கு பின் பார்த்த நபர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து மகிழ்ந்ததை அவர்கள் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.