தமிழ்நாடு

”சட்டம் தாண்டிய சமூகத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின்

Tamil Selvi Selvakumar

சட்டம் தாண்டிய சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை கூறியுள்ளார். 

வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்தார் ஸ்டாலின்:

சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்தார்.

சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம்:

தொடர்ந்து வெள்ளி விழா மலரையும் வெளியிட்ட அவர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம் தான் என்றும், கீரின்வேஸ் சலையில் தான் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.

சட்டம் தாண்டி சமூகத்தையும் கற்க வேண்டும்:

மேலும், சீர்மிகு சட்டப்பள்ளியில் பயில்வோரில் 70 சதவீகிதம் பேர் மாணவிகள் என்றும், சட்டம் தாண்டி சமூகத்தையும், சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும்  அறிவுரை கூறினார்.

அடிப்படை உரிமைகளை காக்க வேண்டும்:

தொடர்ந்து பேசிய அவர், ஏழை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் வழக்கறிஞர்களாக சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும் என மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.