தமிழ்நாடு

அய்யய்யோ...மீண்டும் மீண்டுமா...சென்னையில் தடம் புரண்ட ரயில்!

Tamil Selvi Selvakumar

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற புறநகர் ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட நிலையில், ரயில்வே துறை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை சரி செய்தனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரயில் ஒன்று திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது, பேசின் பிரிட்ஜ்  அருகே ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரயிலில் பயணித்த பயணிகள் ரயிலில் இருந்து குதித்து பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்தனர்.

ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த ரயில் வருவதை பார்த்த பயணிகள் சிவப்பு துணிகளை காட்டி ரயிலை நிறுத்தினர். இதன்மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், ரயில்வே நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவலர்கள் மற்றும் பணியாளர்கள் தடம் புரண்ட ரயிலை சரி செய்தனர்.