தமிழ்நாடு

சொகுசு விடுதியில் திடீர் தீ விபத்து

சென்னை அடுத்த ஆர்.கே சாலையில் உள்ள தனியார் தங்கும் சொகுசு விடுதியில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Malaimurasu Seithigal TV

சென்னை ஆர்கே சாலை சாலையில் உள்ள கிரேஸ் ரெசிடென்சி என்கின்ற தனியாருக்கு சொந்தமான தங்கும் சொகுசு விடுதி கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இதில்  மின்கசிவு காரணமாக காலை திடீரென மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மேலும் தீ ஏற்பட்ட மூன்றாவது தளத்தில் மக்கள் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக
தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயினால் ஏற்பட்ட சேதம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன