தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை-கணக்கில் வராத ரூ.27 லட்சம் பறிமுதல்

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத 27 லட்ச ரூபாய் சிக்கியுள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத 27 லட்ச ரூபாய் சிக்கியுள்ளது.


தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி, அரசு அலுவலகங்களில் திடீரென அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பத்திரப்பதிவு, வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மின்சார வாரியம், பஞ்சாயத்து அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித்துறை, தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட 38 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் மட்டும் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், தாம்பரம், திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் 26 லட்சத்து 99 ஆயிரத்து 335 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல இடங்களில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் பல இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.