தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக சென்னையில் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், திருவான்மியூர், தியாகராய நகர், வடபழனி, வள்ளுவர் கோட்டம், வளசரவாக்கம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் என சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
நள்ளிரவு 2 மணிக்கு பெய்ய தொடங்கிய மழையானது இரண்டு மணிநேரத்துக்கு மேலாக நீடித்தது இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் இதன் தொடர்ச்கயாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.