தமிழ்நாடு

கணவன்மார்கள் பங்கேற்ற சுமங்கலி விளக்கு பூஜை!!

Malaimurasu Seithigal TV

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மன்னார் பாளையம் கிராமத்தில் மனைவிமார்கள் நலமுடன் வாழ கணவர்மார்கள் நடத்தி விநோத பூஜை நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து கோவில்கலில் சுமங்கலி பூஜை விளக்கு பூஜை  மகா பௌர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

வழக்கமாக பெண்கள் கணவன்மார்கள் நலமுடன் வாழ விளக்கு பூஜை செய்வார்கள். ஆனால், வித்தியாசமாக விளாரிபாளையம் கிராமத்தில், கணவன்மார்கள், மனைவி குழந்தைகள் நலமுடன் வாழ விளக்கு பூஜையில் கலந்து கொண்டு மனைவிமார்களுடன் மாலை மாற்றிக் கொண்டு, பெண்கள் நீண்ட ஆயுளுடனும் தீர்க்க சுமங்கலியாக வாழவும் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டுள்ளனர்.

ஆண்கள் கலந்து கொண்டது பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது  என பெண்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.