தமிழ்நாடு

தொடங்குகிறது கோடைக்காலம்..... முன்னேற்பாடுகள் தீவிரம்!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோடைக்காலத்தில் வனப்பகுதியில் தீப்பிடித்து மரங்கள் நாசமாகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன எனவும் இந்த நிலையில் விரைவில் கோடைக்காலம் வர இருப்பதால், வனப்பகுதியில் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோடைக்காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து 24 மணி நேரமும் வனத்துறை அலுவலர்கள் ரோந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் வனத்துறை சோதனை சாவடி வழியாக செல்வோருக்கு தீ தடுப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை செயலாளர், அதிகாரிகள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.