தமிழ்நாடு

சூப்பர்.. சிறுவன் அப்துல் கலாமுக்கு புது வீடு - அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு

சிறுவன் அப்துல் கலாமுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடு வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம் அளித்த பேட்டி, வைரலாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவன் அப்துல்காமலை அழைத்து  பாராட்டினார். அப்போது, வறுமையில் வாடுவதாகவும் சொந்த வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் முதலமைச்சரிடம் அந்த சிறுவன் கூறியிருந்தார்.இந்த நிலையில் சிறுவன் அப்துல்கலாமின் குடும்பத்தினர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். 

அதன்படி , மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை இன்று நேரில் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், எந்த பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்தார். மேலும்  வீடு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்ய  சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நாளைக்குள் அப்துல்கலாமுக்கு வீடு வழங்கப்படும் என அமைச்சர் அன்பரசன் கூறியுள்ளார்.