ஜெயிலர் 2 திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றியால் படக் குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக்கியிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், யோகி பாபு, மிர்னா மேனன், ரித்விக், நமோ நாராயணா ஆகியோர் நடித்துள்ளனர்.
மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் வசூலைக் கடந்து ரூ.628 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் நீல நிற சட்டையும் கருப்பு தொப்பியும் அணிந்து ரஜினிகாந்த் ஐமேக்ஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படம் பார்க்கிறார்.
அவருடன் நெல்சன் மற்றும் அனிரூத் இணைந்துள்ளனர். ரஜினிக்கு அருகாமை இருக்கைகளில் அவரது பேரன்கள் அமர்ந்துள்ளனர்.
"40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் இணைந்து #Jailer2 திரைப்படத்தை வெள்ளித்திரையில் கண்டு களிக்கிறார்!" என கேபிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படம் பார்த்த ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமாக புறப்படுவதை வீடியோவில் காண முடிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.