தமிழ்நாடு

சூப்பர் ஸ்டார் புகைப்படம் குரல் பயன்படுத்துக்கூடாது - பொது அறிவிப்பு

Malaimurasu Seithigal TV

பொது அறிவிப்பு : 

தனது பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நடிகர் ரஜினி காந்த் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினி காந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டுள்ள அந்த பொது அறிவிப்பில், பல தளங்களில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாகவும், இது பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஜினியின் பெயர், புகழ், புகைப்படம், குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த பொது அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.