அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என அரசு அறிவுறுத்தியதை அடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் முகக் கவசங்களை அணிவித்தார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நேற்று முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவுத்தி உள்ளது.
இதையும் படிக்க : பிரபலங்கள் வீடுகளில் தொடரும் திருட்டு சம்பவம்...பின்னணி பாடகர் வீட்டில் நகைகள் கொள்ளை!
இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொது மக்களுக்கு முக கவசங்களை வழங்கிய மருத்துவமனை முதல்வர், உள் நோயாளிகளுக்கு முக கவசங்களை அணிவித்தார்.