சுஷில் ஹரி பள்ளி தாளாளரான சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது..