தமிழ்நாடு

காவல் நிலையத்தில் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...!!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, அங்கிருந்த காவல் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்தார்.  காவல் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்தார்.  அதனோடு மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சிறப்பாக செயல் பட்ட  காவலர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.  காவலர்களின் குறைகளை கேட்டறிந்து பின்பு காவலர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.