தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார், 2025 ஐபிஎல் போட்டியின் போது போதை பொருள் பயன்படுத்தியது போன்ற புகைப்படம் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது . இதையடுத்து அமைச்சர் சரத்குமார் அது போதைப் பொருள் அல்ல என்றும், தனது கைக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மாத்திரையைத் தூளாக்கி கொடுத்ததாகவும் அமைச்சர் சரத்குமார் விளக்கமளித்தார். இந்த காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் குழந்தைக்கு மாத்திரை கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் அதை செல்போனில் வைத்து ATM கார்டால் துள்ளாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த சர்ச்சை வீடியோ வைரல் ஆனதையடுத்து, எதிர்க்கட்சியான திமுகவினர் அவரை பதவி விலக கோரி பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதள பதிவில் “போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது! த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு! இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!” என்று தவெக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் “அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்” எனவும் “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்! என்றும் கருது தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.