தமிழ்நாடு

2001 பொம்மைகள்... 108 சுமங்கலிகள் அர்ச்சனை... நவராத்திரி சிறப்பு பூஜை...

தாம்பரம் அருகே லட்சுமி நாராயணர் கோவிலில்  2001 கொலு பொம்மைகள் வைத்து  108 சுமங்கலி பெண்கள் குங்குமம் அர்ச்சனை செய்து பூஜை நடத்தினர்.

Malaimurasu Seithigal TV

தாம்பரம்: பெருங்களத்தூர்  என்.ஜி.ஓ. காலணயில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோவிலின் 10 ஆம் ஆண்டு சுமங்கலி பூஜை கோவில் நிர்வாகி அருள் தலைமையில் நடைபெற்றது.

இதில் 2001 கொலு பொம்மைகள் வைத்து 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு  பாடல் பாடி குங்குமம் அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். இதில் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது.

10 நாட்கள் நடைபெறும் பூஜையில் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கோவிலில் நிர்வாகி பக்தர்களுக்கு பிரசாதம், மற்றும் பரிசுகளை வழங்கினார்.

நவராத்திரியில் பொதுவாக சுமங்கலிகள் பொம்மைகளுக்கு பூஜை நடத்துவது வழக்கமாக இருந்தாலும், பிரம்மாண்டமாக நடந்த இந்த பூஜையானது பலரது கவனத்தையும் ஈர்த்தது.