பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை பாராட்டி பேசினார். அதில் தமிழ் மொழி மீதான தனக்கு இருக்கும் ஆர்வம் குறித்து பேசினார்.
உலகிலேயே தமிழ்மொழி சிறந்த மொழி. தமிழ் மொழி எனக்கு மிக பிடிக்கும். இந்த மொழியின் ரசிகன் நான். நான் உலகின் பழமையான தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி. தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது. தமிழ் குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
மேலும் சென்னையை சேர்ந்த குரு பிரசாத் மன் கி பாத் உரையின் போது தமிழ்நாடு குறித்தும் தமிழ் மொழி குறித்தும் தான் பேசியதை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டார். MyGov தளத்தில் குருபிரசாத் அவர்களின் பதிவிலிருந்து சில வரிகளை மேற்கொள்ள காட்ட விரும்புகிறேன்.
நீங்கள் தமிழ்நாடு பற்றிப் பேசும் போதெல்லாம் என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது. தமிழ் மொழி, கலாச்சாரம், பண்டிகைகள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான இடங்கள் பற்றியும் பேசியிருக்கிறீர்கள். மனதின் குரலில் நீங்கள் தமிழ்நாடு குறித்து என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்களோ அதனை ஒன்று திரட்டி மின் புத்தகம் ஒன்றை நான் தயார் செய்திருக்கிறேன். இதனை NamoApp -ல் வெளியிட முடியுமா எனக் குரு பிரசாத் கேட்டுக்கொண்டதாக மோடி கூறினார். தமிழ் மொழியின் பால் என்னுடைய அன்பு என்றுமே குறையாது. உங்கள் வருங்கால முயற்சிகளுக்காக வாழ்த்துக்கள்’ என மோடி தனது உரையில் கூறினார்.