தமிழ்நாடு

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்...தேதி அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த மாதம் மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல், அதனைத்தொடர்ந்து  மானிய கோரிக்கைகள் மீதான கூட்டம் ஆகியவை முடிவடைந்த நிலையில், பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, இத்திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.