தமிழ்நாடு

மீண்டு வரும் தமிழகம்.. புதிதாக 788 பேருக்கு கொரோனா!!

தமிழகத்தில் மேலும், 788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நேற்று முன்தினத்தன்று கொரோனா பாதிப்பு 949 ஆக இருந்த நிலையில் நேற்று 788 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 45 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் நேற்று முன்தினம் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் குறைந்து, 191பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 115 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், நேற்று ஒரே நாளில் இரண்டாயிரத்து 692 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 93 ஆயிரத்து 703 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 33 ஆக குறைந்துள்ளது.