Tamil Nadu crop loan waiver Tamil Nadu crop loan waiver
தமிழ்நாடு

"விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ஏமாற்று வேலையை செய்கிறாரா முதல்வர்?" - விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன்

ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலே ஊழலா?

Vinvizhi Leninton

கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. ரூ. 75,000க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 35,000 பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவித்துள்ளார் விஜய். இந்த பயிர்க்கடன் தள்ளுபடியால் 14.43 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள் என்றும் தகவல். மேலும், இந்த பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு ரூ. 5,932.23 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும் என்றும் முதலைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், இது விவசாயிகளை ஏமாற்றும் நோக்கோடு இருக்கிறது நேற்று அவர் பேசினார். ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலே ஊழலா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 100% பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதில் என்னிடம் எந்த ஏமாற்று வேலையும் இருக்காது என்று அவரே உறுதியளித்தார். இப்படி உத்தரவாதத்தை கொடுத்துவிட்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா? என்று கேள்வியெழுப்பினார். இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் விவசாயிகள் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்தே அதற்கு போட்டதாகதான் வரலாறு இருக்கிறது. ஆனால், வாக்குறுதி கொடுத்துவிட்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ஏமாற்று வேலையாக இருக்கிறது. இது எந்த வகையிலும் விவசாயிகளுக்கு பயனளிக்காது. இது குறித்து முதல்வர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

அடுத்த சம்பாவிற்கு சாகுபடி செய்யமுடியுமா? என்ற கேள்வி விவசாயிகளுக்கு மத்தியில் எழுத்துள்ளதாகவும், வறட்சி கொடுமை ஒருபுறம், மறுபுறம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள எ போர் சூழல் காரணமாக உரத்தில் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. எப்படி உற்பத்தியை செய்யப்போகிறோம்? என்ற கவலை உள்ளது. உணவு உற்பத்தி செய்வதை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு அரசு முன்வரவில்லை என்றால் விவசாயிகள் என்ன செய்வார்கள்? என்று அவர் பேசினார். இது மிகப்பெரிய வருவாயை ஈட்ட கூடிய தொழில் அல்ல உழைப்பிற்கேற்ற ஊதியம் கூட கிடைக்காமல் உயிரை பணயம் வைத்து செய்யும் வேலை என்று அவர் ஆதங்கத்துடன் பேசினார். தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளாக முதலமைச்சர் என்ன கொடுத்தாரோ அதை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு வாக்குறுதிகளாக கொடுத்து ஆட்சியமைந்ததும் முதல் கையெழுத்தாக அதை நிறைவேற்றிய வரலாறுகள் கூட இருக்கிறது. அப்படி இருக்க தற்போதுள்ள முதல்வர் முன்னுக்கு பின் முரணாக விவசாயிகள் வயிற்றில் அடிப்பது, சூதாட்ட நிகழ்வுபோல செய்வது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் கூறினார். கூட்டுறவு துறைக்கும், உணவுத்துறைக்கும் பொருத்தமில்லாத அதிகாரிகளை நியமித்திருக்கிறார். சூதாட்டம் போல விவசாயிகளுக்கு அறிவிப்பு வருவதை முதலமைச்சர் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் பேசினார்.

மேலும், கடந்த முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்த நிலையில் அது விவசாயிகளுக்கு மிகுந்த அதிருப்தியை தந்தது. இதனையடுத்து ஆலோசித்து மீண்டும் அறிக்கை அளிக்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது அறிவித்துள்ள விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடியும் யானை பசிக்கு சோளப்பொரியா? என விவசாயிகள் கேட்கும் அளவிற்கு இருப்பதாக விவசாயிகள் வேதனை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.