தமிழ்நாடு

புயலை சமாளிக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை - மா.சு......

ஜேசிபி, டிப்பர் லாரி உள்ளிட்ட 200 வாகனங்கள், 130 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வார்டுக்கு ஒரு மோட்டார் இயந்திரம் இருக்கும் நிலையில் 911 மோட்டார் இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன

Malaimurasu Seithigal TV

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் 16 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காமல் சீரானப் போக்குவரத்து நடைபெறுகிறது. மண்டலத்துக்கு தலா 20 முதல் 30 மரங்கள் விழுந்த நிலையில் சென்னை முழுவதும் 300 முதல் 400 மரங்கள் விழுந்துள்ளன. இந்த மரங்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி செய்துவருகிறது.

தென்காசி, ராஜபாளையம், மதுரை என 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நேராக எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறைக்கு சென்று மழை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அவர், இரவு முழுவதும் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என மாற்றி மாற்றி தொலைபேசி மூலம் பேசி நிலவரத்தை கேட்டறிந்து வந்தார். ஊழியர்கள் இரவு முதலே செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : 

ஜேசிபி, டிப்பர் லாரி உள்ளிட்ட 200 வாகனங்கள், 130 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வார்டுக்கு ஒரு மோட்டார் இயந்திரம் இருக்கும் நிலையில் 911 மோட்டார் இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.

261 மரம் அறுக்கும் இயந்திரங்கள் மூலம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 169 இடங்களில் நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன" என்று கூறினார்.