தமிழ்நாடு

நாகாலாந்து தாக்குதல் எதிரொலி - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி பயணம்...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Malaimurasu Seithigal TV

 சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருந்த நிலையில், அவர் இன்று கோவை பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், நாகலாந்தில், பிரிவினைவாதிகள் என்று நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவித் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்றுள்ளார். இவர், ஏற்கனவே நாகலாந்து ஆளுநராக இருந்தவர் என்பதால், அங்குள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.