தமிழ்நாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்  

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுவதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார்.

Malaimurasu Seithigal TV

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுவதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார்.

தமிழக ஆளுநராக பதவி ஏற்ற பின் முதன் முறையாக பிரதமரை சந்திக்கும் அவர், மூத்த அமைச்சர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நீட் தேர்வு விலக்கு கோரி முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து பேசியிருந்தார்.

இதற்கிடையே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசிய தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்து பேசியிருந்தனர். இந்த பரபரப்பான சூழலில், ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.