தமிழ்நாடு

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

Suaif Arsath

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது அரசு விழாக்களிலும் வெளிப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று இரவு 9 மணி விமானத்தில் டெல்லி செல்லும் அவர், நாளை பீகாரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.