தமிழ்நாடு

டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்த உதயநிதி...!

Tamil Selvi Selvakumar

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

டெல்லிக்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர்  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், கேலோ விளையாட்டு போட்டியை தமிழ்நாட்டில் நடத்த வேண்டியும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.