தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இரண்டு வாரங்களுக்கு பிறகு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பொதுமக்கள் அதிக அளவு நடமாடுவதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதே போல், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் அதிக அளவு கடைகளில் குவிந்தனர். மேலும் சாலைகளில் அதிகம் பேர் வாகனங்களில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இ-பதிவு இல்லாத வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.