ஜார்கண்ட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டு மாணவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
நாமக்கலைச் சேர்ந்த மதன்குமார், ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சில், முதுகலை 2ம் ஆண்டு படித்து வந்தார். தொடர்ந்து விடுதியின் பின்புறத்தில் பாதி எரிந்த நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிக்க : இரண்டு நாள் சோதனைக்கு பின் அபிராமி ராமநாதனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை!
தீபாவளிக்கு ஊருக்கு வரவில்லை, தங்கையின் திருமணத்துக்கு 20 நாள் விடுமுறையுடன் வரப்போவதாக, தனது குடும்பத்தினருக்கு கடைசியாக அவர் எழுதிய கடிதம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.