தமிழ்நாடு

மூன்று  மாதங்களுக்குள் தமிழகம் குட்கா இல்லாத மாநிலமாக மாற்றப்படும்: மா.சுப்பிரமணியன் உறுதி

மூன்று  மாதங்களுக்குள் தமிழகம் குட்கா இல்லாத மாநிலமாக மாற்றப்படும்  என  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Malaimurasu Seithigal TV

தமிழக மாநில எல்லையான ஒசூர் அடுத்த ஜூஜூவாடி சோதனை சாவடியில் கர்நாடகாவிலிருந்து வரக்கூடிய வாகனங்களில் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகார்களை அடுத்து  தீவிர சோதனை நடத்தப்படு வருகிறது. இதுக்குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலாக்களை தடுக்க சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்திலிருந்து ஒசூர் வழியாக தமிழகத்திற்கு கடத்தப்படும் நிலையில் தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மூன்று மாதங்களுக்குள் தமிழகம் குட்கா இல்லாத மாநிலமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கர்நாடகத்திலிருந்து குட்கா கடத்தப்படுவதை தவிர்க்க அங்கிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதித்து வருகின்றனர் என கூறினார்.